தமிழ் திரையுலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ்சிவன். இருவருக்கும் இடையே வரும் ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.


இந்த நிலையில், கோலிவுட் நடிகைகள் பலரும் தமிழ்நாட்டுக்கு மருமகளாக வந்துள்ளனர். அந்த ஜோடிகளின் வரிசையை கீழே காணலாம்.


ரோஜா – செல்வமணி:


90-களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துள்ளார்.


குஷ்பு – சுந்தர்.சி


90-களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த குஷ்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்திக் என பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி.யை திருமணம் செய்துள்ளார்.




தேவயாணி – ராஜகுமாரன்:


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராஜ்குமார். இவர் விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர். நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய ராஜகுமாரனை 2001ம் ஆண்டு திருமணம் செய்தார்.




சினேகா – பிரசன்னா :


தமிழ் திரையுலகின் 2000ம் ஆண்டு கோலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சினேகா. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து வசூல்ராஜா, பம்மல் கே. சம்பந்தம் படத்தில் நடித்துள்ளார். 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.




அமலாபால் – ஏ.எல்.விஜய் :


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிய அமலாபால் மைனா படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர், 2017ம் ஆண்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார்.




சூர்யா – ஜோதிகா :


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. பிரபல நடிகை நக்மாவின் சகோதரியான இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், சூர்யா என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சூர்யாவை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.




மஹத் – பிரசிமிஸ்ரா :


தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் மஹத். மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடித்த இவர் மிர்சாபூரில் பிறந்து வளர்ந்த பிரபல மாடல் ப்ரசிமிஸ்ராவுடன் 2020ம் ஆண்டு திருமணம் செய்தார்.