தற்போது இந்த படத்தின் First லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் பைவ் ஸ்டார் எல்எல்பி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில் குமார் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கு 'அதிகாரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இறுதியாக 2019ம் ஆண்டு வெளியான முனி படத்தில் நான்காம் பாகத்தில் நடித்தார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துவரும் லாரன்ஸ் சிறு வயது முதலே சினிமா ஆசையில் வலம்வந்த ஒரு சிறுவன் என்பது பலரும் அறிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தந்த வாய்ப்பின் மூலம் திரையுலகில் குரூப் டான்சராக அறிமுகமானார். உழைப்பாளி படத்தில் 'உழைப்பாளி இல்லாத நாடுதான்' பாடல், ஜென்டில் மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே பாடல் என்று பல சூப்பர் ஹிட் பாடல்களில் ராகவா லாரன்ஸ் குரூப் டான்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தனது கடின உழைப்பால் டான்சர் மாஸ்டராக மாறினார். பிற்காலத்தில் தனது கனவு நாயகன் ரஜினிகாந்த்க்கு பல பாடல்கள் choreography செய்துள்ளார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பல படங்களில் குரூப் டான்சராக இருந்த லாரன்ஸ் தல அஜித் நடிப்பில் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் பிரஷாந்த் நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 2002ம் ஆண்டு அற்புதன் இயக்கத்தில் வெளியான அற்புதம் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். அதனைத்தொடர்ந்து இயக்குநராகவும் களமிறங்கினர். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான மாஸ் என்ற படத்தை இயக்கினார் லாரன்ஸ். அதன் பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் முனி. இன்றளவும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதியக தனது முனி 4 படத்தில் தோன்றிய ராகவா தற்போது வெற்றிமாறன் எழுத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் அதிகாரம் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.