திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40), இவரது மனைவி  மஞ்சுளா (32), இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் முருகன்  நாடக கலைஞராக நடித்து வருகிறார்.  இவர் பல வருடமாக வேலைக்குச் செல்லாமல்  குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அடிகடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மூத்த மகள் 10ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார், அதன் பிறகு பள்ளி படிப்பு நிறுத்தி விட்டு வீட்டிலே இருந்து வந்துள்ளார், பின்னர் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில், முருகனின்  மனைவி மற்றும் இளைய மகள் திருவண்ணாமலைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றிருந்தனர். முருகன் மது அருந்திவிட்டு மதியம் நேரத்தில் முருகன் குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். 


அப்போது வீட்டில் இருந்த மூத்த மகளிடம்  குடிபோதையில் இருந்த தந்தை தனது மகள் என்று கூட பாராமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மகள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் தலையில் பின்புறம் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குடிபோதை தந்தை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  



 


அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து  கீழ்பென்னாத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர், பின்னர் முருகனின் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முருகனின் (19) வயதான மகளை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் மூத்த மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த நிலையில் 6 மாதத்திற்கு  முன்பு குடிபோதையில் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது, அப்போது எனது அம்மாவிடம்  மற்றும் உறவினர்களிடம் கூறினேன் எனக் கூறியுள்ளார், அவர்கள் அப்போது முருகனை  கண்டித்துள்ளனர், இதன் காரணமாகத்தான்  சென்னை தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றது  விசாரணையில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.



இது குறித்து திருவண்ணாமலை வழக்கறிஞர் சங்கர் தெரிவிக்கையில், ”திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர், ஒரு பெண் தந்தையால் வன்கொடுமை துன்புறுத்தல்  செய்யப்படும் பொழுது அந்தப் பெண் தந்தையைக் கொன்றுவிட்டதாக  ஐபிசி 302 வில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய  பாதுகாப்புச்  சட்டத்தில் பிரிவு 100 இன் கீழ் உட்பிரிவு மூன்றில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காம வெறி பிடித்த மிருகங்களை கொன்றால் கூட அது குற்றமாகாது, தன்னை பாதுகாப்பிற்காக நடைபெற்ற செயல் தீர்க்கமான ஒரு சட்டம் இருக்கும் பொழுது, ஒரு பெண்ணை கொலை குற்றவாளியாக வழக்கை பதிவு செய்துள்ளது, மிகவும் வேதனைக்குரிய செயலாகும், இந்தப் பெண் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தையாக இருந்தால் கூட கொள்வதற்கு துணிந்து இருக்கிறார். காவல்துறையின் கைது சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
 



தற்போது அந்த பெண்ணை நீதி மன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர் , வாக்குமூலம் பதிவு செய்த பின்னர்  நீதிஅரசர் அவர்கள் ஐபிசி 100/3ல வரக்கூடிய தற்காப்பு மரணம் தான் கொலை அல்ல என விடுதலை செய்து விடுவார்கள், என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஏனென்றால் நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையில் கூறுகிறோம். காவல்துறையினரே செய்யக்கூடாதா என எங்களது கேள்வி உள்ளது. இந்த வழக்கினை காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர், தந்தை உண்மையிலே வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதனால் அவரிடம் இருந்து மீண்டு வருவதற்காக தந்தையை தாக்கியுள்ளார், அதனால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிந்த பிறகும் காவல்துறையினர் அந்த பெண்ணை  பாதுகாக்காமல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ஐபிசி 302 என்ற வழக்குப்பதிவு  செய்துள்ளது, அதன் பின்னர் இதனை வழக்கினை மாற்றி விடுவோம் என நாடகம் ஆடுவது பெண்ணினத்தை கேவலப்படுத்த கூடிய செயல் பெண்களிடம் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். 



பெண்களின் மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக அற்புதமான வழிகள் மற்றும் சட்டப் பாதுகாப்புகள் உள்ளது, அதனை கேலிக்கூத்து ஆக்குவது கண்டிக்கத்தக்கது அந்தப் பெண்ணின் மீது  ஐபிசி 302 வழக்கு பதிவு செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. பெண்களின் மன ரீதியாக தங்களின் மாண்பை பாதுகாத்துக்கொள்ளவும்,  தற்காப்பிற்காக நீங்கள் கொலை செய்தால் கூட அது தவறாக மற்றும் கொலை குற்றமாக ஆகாது என்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன, என தெரிவித்தார். பெண்களுக்கு இது போன்ற சட்டங்களை பள்ளியிலே கற்பித்தால் இது போன்ற வன்கொடுமை செய்ய வரும்போது தங்களை பாதுகாத்து கொள்வதற்கு ஒரு உறுதுணையாக இருக்கும்” என கூறினார்.