தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. மதுரையை பூர்விமாகக் கொண்டவர் சின்னத்திரையில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களின் மூலம் கவனம் பெற்று தற்போது லீட் ரோல்களில் நடித்து மக்களின் பேரன்பை பெற்றுள்ளார். கடந்த 2018ல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓவியா தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கினார் கோமதி பிரியா. அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் வேலைக்காரன், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து அனைவரின் ஃபேவரட் நடிகையாகவும் மாறிவிட்டார்.
மலையாளத்தில் champaneer Poovu, தெலுங்கில் Hitler Gari Pellam, Radhaku Neevera Pranam போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் மலையாள மொழி மீது அலாதி பிரியம் என்பதே சமீபத்தில் அளித்த பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று தமிழில் ஹிட் அடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சனில் பங்குபெற்று அசத்தி வருகிறார். ஒரு பக்கம் சீரியல் மறுபக்கம் ரியாலிட்டி ஷோக்கள் என கலக்கி வருகிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்திருக்கும் மகாநதி சீரியலின் மறுபதிப்பு மலையாளத்திலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதன் மறுபதிப்பு வெர்ஷனில் சச்தேவுடன் இணைந்து கோமதி பிரியா நடிக்க இருக்கிறார். இதுதொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவை திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. வயது 30 தாண்டியும் நடிப்பிற்காக பல மாநிலங்களுக்கு பறந்து கொண்டிருக்கிறார். இப்படியான சூழலில் கிடைக்கும் நேரத்தை இயற்கையை ரசிப்பது அல்லது பயணம் செய்வது என பிடித்த இடங்களுக்கும் சென்று வருகிறார்.
அந்த வகையில், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஜடாயு பாறை கோயிலுக்கு சுற்றுலா சென்றிருக்கு அவர், அதன் வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில், சில நேரங்களில் உங்களுக்குத் தேவையானதை வாழ்க்கை கொடுக்காமல் இருக்கலாம். அதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்பது அல்ல, கடவுளுக்கு நிச்சயம் தெரியும் உங்களுக்கு தகுதியானது எது என்று எனக் குறிப்பிட்டுள்ளார். கோமதி பிரியாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.