நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு நேற்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தங்களது பெற்றோர்கள் முன் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைந்ததும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெற இருப்பதாக முடிவு செய்துள்ளார்கள். தமிழ் திரையுலகினர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார். விஷால் சாய் தன்ஷிகா ஆகிய இருவரின் சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம் 

விஷால் சொத்து மதிப்பு 

பிரபல கிரானைட் தோழிலதிபர் ஜிகே ரெட்டி மற்றும் ஜானகி தேவிக்கு மகனாக பிறந்தவர் விஷால். விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பது இவரது முழுப்பெயர். சென்னையில் பிறந்து வளர்ந்த விஷால் டான் பாஸ்கோ பள்ளியில் படித்து , லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் படித்தார்.  செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமான விஷால் தாமிரபரணி , சண்டக்கோழி என தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக நடித்து வரும் விஷால் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற சொந்த தயாரிப்பு நிருவனத்தின் கீழ் பல வெற்றிப் படங்களையும்  தயாரித்துள்ளார். விஷாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ 125 கோடி என கோல்டன் சென்னை என்கிற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. விஷாலிடம் Jaguar XF , Audi Q7 , BMWX6 , Toyota Innova Crysta ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.

சாய் தன்ஷிகா சொத்து மதிப்பு 

பேராண்மை , பரதேசி , அரவான் , கபாலி போன்ற படங்களில் நடித்து பரவலான கவனமீர்த்தவர் சாய் தன்ஷிகா. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தேர்ந்த நடிகை என சொல்லு அளவிற்கு இவர் நடித்த கதாபாத்திரங்கள் பேசப்படுகின்றன. சாய் தன்ஷிகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ 6 கோடி என ஆத்மகதா என்கிற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அவரது மாத வருமானம் 10 முதல் 15 லட்சம்.  விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரின் சொத்து மதிப்பு ரூ 131 கோடியாகும் .

விஷால் சாய் தன்ஷிகா இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை கடந்த ஜூலை மாதம் அறிவித்தனர். சாய் தன்ஷிகாவுக்கு முன்பாக விஷால் வரலட்சுமி சரத்குமார் , லக்‌ஷ்மி மேனன் ஆகிய நடிகைகளை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.