90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கைக்குள் அடக்கி வைத்திருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். டாக்டராக வேண்டியவர். எதேச்சையாக ஒரு படத்தில் நடித்து கொடுக்க அதுவே அவரின் வாழ்க்கையாக மாறியது. 1990ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படம் மூலம் இளம் ஹீரோவாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார் நடிகர் பிரஷாந்த். முதல் படமே வெற்றி விழா கொண்டாடியதால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் குவிந்தன. 


 



டாப் ஸ்டார் வெற்றிகள்:


இன்று தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக ஜொலிக்கும் அஜித், விஜய்கூட அந்தக் காலக்கட்டத்தில் பிரஷாந்த் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக திருடா திருடா, ராசாமகன், செந்தமிழ் செல்வன், ஆணழகன், கல்லூரி வாசல் என ஏராளமான படங்களில் நடித்து வந்த பிரஷாந்த், ஒரு சில தோல்விகளை சந்தித்த பிறகு 1998ஆம் ஆண்டு வெளியான 'ஜீன்ஸ்' படம் மூலம் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.


அது ஒரு சூப்பர் கம்பேக் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், மஜ்னு என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தார். 


 



 


எதிர்பார்க்கப்படும் ரீ என்ட்ரி :


இடைப்பட்ட காலத்தில் பீல்டு அவுட்டான நடிகர் பிரஷாந்த் பாலிவுட் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க நினைத்தார். ஆனால் அப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப் போகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு ரீ என்ட்ரியை கொடுக்கும் என்பது  அவரின் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


சொத்து மதிப்பு :


இன்று 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் பிரஷாந்த் சொத்து விவரம் குறித்த தகவல்களை பார்க்கலாம். சென்னை, தி. நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் மிகப் பெரிய அடையாளமாக விளங்கும் உயர்ந்து நிற்கும் பிரஷாந்த் கோல்டு டவர் பல கோடிகள் மதிப்புடையது.


இந்த டவரில் தான் மிகவும் பிரபலமான நகைக்கடையான ஜாய் ஆலுக்காஸ் ஷோரூம் இயக்கி வருகிறது. அதில் நடிகர் பிரஷாந்தும் ஒரு ஷேர் ஹோல்டர் என்பது பலரும் அறியாத தகவல். 17 மாடிகள் கொண்ட  அந்த டவரில் பல மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இது தவிர இன்னும் பல வீடுகள், சொத்துகள், சொகுசு கார்கள் உள்ளன. பல தொழில்களில் முதலீடு செய்துள்ளனர்.   


இடைப்பட்ட காலத்தில் ஃபீல்டில் இல்லை என்றாலும் மாதம் 1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார். எனவே அவரின் நிகர சொத்து மதிப்பு 85 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.