சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக விமானத்தில் பயணிக்க முயன்ற, வங்கதேச வாலிபரை, சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஓப்படைத்தனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில்  இருந்து, வங்கதேச தலைநகரம் டாக்கா செல்லும் அஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.



 

போலி பார்ஸ்போர்ட்:

 

அப்போது அந்த விமானத்தில், சென்னையில் இருந்து டாக்கா  செல்ல வந்த, ஹையூல் அலி முகமது ஷேக் (28) என்ற பயணி, இந்திய பாஸ்போர்ட், மற்றும் ஆவணங்கள் மூலம் பயணிக்க வந்திருந்தார்.  ஆனால் குடியுரிமை அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது.



இதை அடுத்து அந்தப் பயணியின்  பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார். அப்போது அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த பயணி என்று தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக ஊடுருவி வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி  பாஸ்போர்ட் வாங்கியுள்ளார் என்றும் தெரிந்தது. இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் ஹையூல் அலி முகமது ஷேக்கை கைது செய்தனர். அதோடு மேல் நடவடிக்கைக்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், இன்று அதிகாலை ஒப்படைத்தனர்.

 



 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண