நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின், மனைவி கிருத்திகா தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2013-ஆம் ஆண்டு "வணக்கம் சென்னை " திரைப்படம் வெளியானது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் "காளி" என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் அவர் இயக்குநர் களத்தில் இறங்கியுள்ளார். ஆனால் இம்முறை திரைப்படம் அல்லாத புதிய தளமான வெப் சீரிஸை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கான கதாநாயகன் தேடும் பணி மும்முரமாக நடைப்பெற்றது. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான குக் வித் கோமாளி அஷ்வினை கதாநாயகான தேர்வு செய்துள்ளது படக்குழு. ஆனால் அஷ்வின் அதனை மறுத்ததாக தெரிகிறது. காரணம் அஷ்வின் "நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அதுவும் திரைப்படத்தில்தான் " என தீர்க்கமாக இருக்கிறாராம். எனவே தற்பொழுது வெள்ளித்திரையில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார். அறிமுக இயக்குநர் ஹரிஹரன் என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கும் அஸ்வின் அடுத்தடுத்த படங்களின் கதை கேட்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.
ஆரம்பகாலகட்டத்தில் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். அஷ்வின் மறுத்ததை அடுத்து வெப் சீரிஸ் படக்குழு நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் ஜெயராம் , சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை பாராட்டும் விதமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது