Kiara Advani Sidharth Malhotra: எந்தன் அன்பே நீ தானே.... இணையத்தைக் கலக்கும் கியாரா - சித்தார்த் திருமண வீடியோ!
இந்த ஆண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளிய க்யூட் ஜோடி கியாரா - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி.

தங்கள் காதலை இதுவரை அறிவிக்காமலேயே இருந்து வெற்றிகரமாக காதலர் மாதமான பிப்ரவரியில் திருமண செய்துகொண்ட சித்தார்த் - கியாரா ஜோடி தங்கள் திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
கியாரா - சித்தார்த்:
Just In




இந்த ஆண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளிய க்யூட் ஜோடி கியாரா - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி. இருவரும் காதலிப்பதாக 2 ஆண்டுகளாகவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், இவை எதைப் பற்றியும் மீடியாக்களிடம் எங்கேயும் மூச்சுகூட விட்டு உறுதி செய்யாமல், இறுதியாக வெற்றிகரமாக தங்கள் திருமணத்தையும் முடித்துவிட்டு உலகுக்கு தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
திருமண வீடியோ:
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் கடந்த 7ம் தேதி இவர்களது கனவுத் திருமணம் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், அன்றைய நாளே புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறின. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே சூழ இத்திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து மழையை பொழிந்தனர்.
இந்நிலையில், இன்று இவர்களது திருமண வீடியோ வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. க்யூட்டான பிங்க் நிற திருமண லெஹங்கா உடையில் சித்தார்த்தை நோக்கி நடனமாடியபடி இந்த வீடியோவில் வரும் கியாரா காண்போரின் இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறார்.
முன்னதாக,திருமணத்தின்போது கியாராவை நிற்க சொல்லிவிட்டு, சித்தார்த் மல்ஹோத்ரா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தன.
இந்நிலையில், கியாராவின் மீதான தன் காதலை காண்பிக்கும் வகையிலும், வழக்கமான பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையிலும் சித்தார்த் கியாராவின் காலில் விழுந்து வணங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் பிரபலங்களான ஷாஹித் கபூர் அவரது மனைவி மிரா கபூர், கரண் ஜோஹர், ஜூஹி சால்வா ஆகியோர் கியாரா - சித்தார்த் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஜெய்சால்மர் விமான நிலையத்தில் திருமணம் முடிந்த பின் சித் - கியாரா மும்பை திரும்பிய புகைப்படங்களும் இணையத்தில் ஹிட் அடித்தன. தொடர்ந்து டெல்லி, மும்பை என 2 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை சித் - கியாரா ஜோடி நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகின.
மேலும் படிக்க: Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!