கணினி வழியே மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை நடக்கவுள்ள மாநில ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு மாநிலத்‌ தகுதித்‌ தேர்வு (TN SET) 2024 ஆம்‌ ஆண்டிற்கான அறிவிக்கை 20.03.2024 அன்று மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகம்‌ மூலம்‌ வெளியிடப்பட்டது.

தேர்வு எப்போது?

ஆசிரியர்‌ தேர்வு வாரிய 14.02.2025 நாளிட்ட பத்திரிக்கைச்‌ செய்தியில்‌ யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, மாநிலத்‌ தகுதித்‌ தேர்வு, 06.03.2025, 07.03.2025, 08.03.2025 மற்றும்‌ 09.03.2025 ஆகிய தேதிகளில்‌ மூலம்‌ நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டது.

தற்போது, தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரி https://trb.tn.gov.in/ –ல் தேர்வர்கள்‌ தங்களது User Id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேலும் கணினி வழித் தேர்வுக்கு (Computer Based Examination) பயிற்சித்‌ தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ இன்று முதல்‌ பயிற்சியினை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் தேர்வர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌''.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எத்தனை பேர்?

மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 99,178 தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லைப் (பிறந்த தேதி) பதிவிடவும்.

தேர்வர் டேஷ்போர்டு பக்கத்துக்குச் செல்லவும்.

அதில் உள்ள அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.            

கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/