WPL எனப்படும் மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் நடிகை க்ரித்தி சனோன் ஆடிய நடனம் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


மகளிர் ஐ.பி.எல். தொடக்க விழா:


ஆண்களுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 15 சீசன்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வரிசையில் புதிதாக மகளிருக்கான டி20 ஓவர் பிரிமியர் லீக் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதற்கான தொடக்க விழாவுடன் மும்பை டி ஒய் பாட்டில் மைதானத்தில் முன்னதாக தொடங்கி நடைபெற்றது. இன்றைய முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதும் நிலையில், தொடக்க விழா முன்னதாக கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.


பரமசுந்தரி புகழ் க்ரித்தி சனோன்:


இந்நிலையில் இந்தத் தொடக்கவிழாவில் நடிகைகள் க்ரித்தி சனோன், கியாரா அத்வானி ஆகியோரின் சிறப்பு நடனங்கள் இடம்பெற்றன. ஏற்கனவே இவர்கள் இருவரும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில் தற்போது க்ரித்தி, கியாரா இருவரது நடனங்களும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.


 






மேலும் பஞ்சாப் ராப்பர் ஏ.பி. தில்லோனின் சிறப்பு பெர்ஃபாமன்ஸூம் கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






முன்னதாக இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டின் முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், UP வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் என மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. 


இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மும்பை அணி கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி மகளிர் அணியின் கேப்டனகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங், டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், பெத் மூனி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியையும் வழி நடத்துகின்றனர். ஆஸ்திரேலிய மகளிர் அணி நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி  யு.பி வாரியரஸ் அணி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.