பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துக்குள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி,அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.


தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள குஷ்பு தொடர்ந்து தன் ரசிகர்களுடன் உரையாடி  வருகிறார்.


அந்த வகையில் மூக்குத்தி, மின்னும் கண்களுடன் புது ப்ரொஃபைல் ஃபோட்டோ ஒன்றை குஷ்பு ட்விட்டரில் அப்டேட் செய்துள்ளார். இந்த ஃபோட்டோவுக்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


 






முன்னதாக முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குஷ்பு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய கையோடு ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்திருந்தார்.


டெய்ல் போன் எனப்படும் முதுகெலும்பின் முடிவில் உள்ள பாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குஷ்பு வீடு திரும்பியுள்ளார்.


இது குறித்து தன் ட்விட்டர் தளத்தில் புகைப்படத்துடன் குஷ்பு பதிவிட்ட நிலையில், கமெண்ட் செக்‌ஷனில் அவர் விரைந்து உடல்நலன் தேற ரசிகர்கள் வாழ்த்தி இருந்தனர்.


இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.


 






தமிழ் சினிமா ரசிகர்களை இன்றும் கவர்ந்து வரும் நடிகை குஷ்பு, தன் கணவர் சுந்தர்.சியின் காஃபி வித் காதல் படத்தில் முன்னதாக நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும் மலையாளத்தில் காதல் முடிச்சு எனும் படத்திலும் குஷ்பு நடித்துள்ளார்.


இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவின் பெயரால் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.