தன் இளைய மகள் அனந்திதா புகைப்படத்துடன் குஷ்பு பகிர்ந்துள்ள உணர்ச்சிகரமான பதிவு அவரது ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continues below advertisement

பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துக்குள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி,அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Continues below advertisement

மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள குஷ்பு தொடர்ந்து தன் ரசிகர்களுடன் உரையாடி  வருகிறார். அந்த வகையில் முன்னதாக தன் இளைய மகள் அனந்திதாவுடன் புகைப்படம் ஒன்றை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

அதில், ”உலகில் மிகவும் ஆறுதலான இடம் உங்கள் குழந்தைக்கு அருகில் தான் இருக்கிறது. என்னுடைய சின்னஞ்சிறிய பெண். என் பொம்மைக் குட்டி” என உணர்ச்சிகரமாகப் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

 

தமிழ் சினிமா ரசிகர்களை இன்றும் கவர்ந்து வரும் நடிகை குஷ்பு, தன் கணவர் சுந்தர்.சியின் காஃபி வித் காதல் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும் மலையாளத்தில் காதல் முடிச்சு எனும் படத்திலும் குஷ்பு நடித்துள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவின் பெயரால் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.