கே.ஜி.எஃப் 3 படத்தை மார்வெல் போன்று எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார். 


இது குறித்து பேட்டி ஒன்றி பேசிய விஜய் கிர்கண்டுர்  “ பிரசாந்த் நீல் தற்போது சலார் படத்தில் பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட 35 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  அக்டோபர் நவம்பர் மாதங்களில் முடிவடைந்து விடும் என்று நம்புகிறேன். அதனால் கே.ஜி.எஃப் 3 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் நடத்த  திட்டமிட்டு இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் 3 படம் வெளியாகும் என நம்புகிறோம்.   



                                                             


யஷ்ஷூடன் வேறு ஏதாவது புது கதாநாயகர்கள் இணைவார்களா என கேட்கப்பட்ட போது, “ அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் மார்வெல் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். வெவ்வேறு படத்தில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டு வந்து டாக்டர் ஸ்ரேஞ்ச் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் அல்லது டாக்டர் ஸ்ரேஞ்ச் வழியில் கே.ஜி.எஃப் 3 யியும் நடக்கும். அப்படி அமையும் போதுதான் எங்களால் பெரிய அளவிலான பார்வையாளர்களை உள்ளே கொண்டுவர முடியும். 


முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.


19 வயது எடிட்டர்


இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண