Yash19: கேஜிஎஃப் மூலம் மெகா ஸ்டாராக கொண்டாடப்பட்ட யஷ் பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் உடன் கைக்கோர்ப்பது உறுதியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட திரையுலகில் மட்டும் பிரபல முகமாக வலம் வந்த நடிகர் யஷ், கேஜிஎஃப் என்ற ஒற்றைப் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார். இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் யஷ்ஷை அடுத்த தளத்துக்கு உயர்த்தி மாஸ் நடிகர் இமேஜை அவருக்கு பெற்றுத் தந்தது.. ஆக்ஷனில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய யஷ், இந்த ஒரே படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை பெற்றார்.
2018ஆம் ஆண்டு யஷ் நடிப்பில் வெளிவந்த கேஜிஎஃப் கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவால் 2ம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான கேஜிஎஃப் 2 உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. இந்த படத்துக்கு பிறகு வேறெந்த படங்களிலும் கமிட் ஆகாமல் சைலெண்டாக இருந்த யஷ், தற்போது பிரபல மலையாள இயக்குநடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லையர்ஸ் டைஸ்’, ‘மூத்தோன்’ படங்களை இயக்கிய கீது மோகன் தாஸ் இயக்க உள்ள படத்தில் யஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது யஷ்ஷின் 19வது படமாக வெளிவர உள்ளது.
சத்யராஜ் நடித்திருந்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, கமல்ஹாசனின் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ள கீது மோகன் தாஸ் 'லையர்ஸ் டைஸ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற கீது மோகன் தாஸ், யஷ்ஷை வைத்து படம் இயக்க உள்ளதால் ரசிகர்களிடயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: The Vaccine War Trailer: வேக்சின் வார் ட்ரெய்லரில் ’பாரத்’... அடுத்த சர்ச்சைக்கு தயாரான காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்!