கே.ஜி.எஃப் 2 படத்தில் யஷ் மற்றும் படக்குழு வாங்கிய சம்பள விவரங்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.


 






வெளியான அன்றைய தினமே 130 கோடிக்கு மேல் வசூல் செய்த கே.ஜி.எஃப் 2, பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த தொகையை 7 நாட்களில் வசுலித்து சாதனை படைத்தது. தற்போதும் வசுல் சாதனை படைத்துவரும் கே.ஜி.எஃப் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடித்த நடிகர் யஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கே.ஜி.எஃப் 2 படத்திற்காக யஷ்ஷூக்கு 27 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர படத்தின் லாபத்தில் இருந்து சில சதவீதங்கள் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.


அதே போல படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சஞ்சய் தத்திற்கு 10 கோடி வரை வழங்கப்பட்டிருப்பதாகவும், பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனுக்கு 2 கோடியும், இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு 20 கோடி வரையும், கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் 4 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு 82 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.