‘கேஜிஎஃப் 2’..
யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்தது. இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார். படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படத்தின் மூன்றாம் பாகத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மூன்றாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய கேஜிஎப்2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 3ம்தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது கேஜிஎப் 2. சப்ஸ்க்ரைப் செய்யப்பட்ட அனைத்து பயனாளர்களும் இனி கேஜிஎப் படத்தை ஓடிடியில் கண்டுகளிக்கலாம் என அமேசான் குறிப்பிட்டுள்ளது.
பணம் செலுத்தி..
முன்னதாகவே கேஜிஎப் 2 அமேசானில் வெளியானது. ஆனால் சிறு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. அது ரெண்டல் முறை. நீங்கள் அமேசான் மெம்பராக இருந்தாலும் கேஜிஎப் படத்தைப் பார்க்க முடியாது. ரூ199 பணம் செலுத்தியே தற்போது பார்க்க முடியும். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை அமேசான் கொண்டுவந்தது.
மிரட்டிய கே.ஜி.எஃப்
கே.ஜி.எஃப் 3..
கே.ஜி.எஃப் 3 படத்தை மார்வெல் போன்று எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றி பேசிய விஜய் கிர்கண்டுர் “ பிரசாந்த் நீல் தற்போது சலார் படத்தில் பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட 35 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் முடிவடைந்து விடும் என்று நம்புகிறேன். அதனால் கே.ஜி.எஃப் 3 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் 3 படம் வெளியாகும் என நம்புகிறோம்.
யஷ்ஷூடன் வேறு ஏதாவது புது கதாநாயகர்கள் இணைவார்களா என கேட்கப்பட்ட போது, “ அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் மார்வெல் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். வெவ்வேறு படத்தில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டு வந்து டாக்டர் ஸ்ரேஞ்ச் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் அல்லது டாக்டர் ஸ்ரேஞ்ச் வழியில் கே.ஜி.எஃப் 3 யியும் நடக்கும். அப்படி அமையும் போதுதான் எங்களால் பெரிய அளவிலான பார்வையாளர்களை உள்ளே கொண்டுவர முடியும் என்றார்.