திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கேஜிஎப் 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த 4ஆவது இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது.
இந்தப்படம் வெளியானது முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது. இந்த நிலையில், ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
கன்னட ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேஜிஎஃப் படத்துக்கு முன்பு சில தமிழ் ட்ரோலர்கள் கன்னட படங்களை ட்ரோல் செய்தனர். இன்று ஒரு கன்னட படமான கேஜிஎஃப் வசூலில் உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்துள்ளது. ஒரு தமிழ் படம் கூட 1000 கோடியை தாண்டவில்லை. ஆனால் இன்று ஏராளமான தமிழ் உள்ளிட்ட பிற மொழி மக்களை கேஜிஎஃப் படத்தை ஆதரிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தப்படம் தமிழில் அதிகம் வசூல் செய்த ‘2.ஓ’ படத்தின் வசூலை பீட் செய்தது. தமிழில் இதுவரை எந்தப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை. தெலுங்கில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூலிக்காததை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்