கே.ஜி.எஃப் 2 படத்தின் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி,கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்தியாவில் 134.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 






நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். படம் மாபெரும் வெற்றி பெற்றதயைடுத்து, கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கே.ஜி.எப். இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், அந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையிலும் கே.ஜி.எப். 2-ஆம் பாகம் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


 






இந்தப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டியும் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய்ததும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.