நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கடந்த 14 மாதம் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் இந்தத்திரைப்படம் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி 18 நாட்கள் ஆன நிலையில் தற்போது அது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.






கே.ஜி.எஃப் 2 படத்தால் ரன்அவே 34 மற்றும் ஹூரோபண்டி படங்களின் வசூலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கே.ஜி.எஃப் திரைப்படம் மே 1 அன்று 11.25 கோடியும், ரன்அவே 34 திரைப்படம் 7.25 கோடியும், ஹூரோ பண்டி 2 திரைப்படம் 4.25கோடியும் வசூலித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். 






அதே போல, கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 15 வருடத்தில் வெளியான படங்களில மிகப் பிரம்மாண்டமான வெற்றியை கே.ஜி.எஃப் திரைப்படம் பெற்றுள்ளது. 3 வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு காட்சி கூட, ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது” என்று பதிவிட்டு இருக்கிறார். 






முன்னதாக இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.