கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியாகியது.
படத்தின் முதல் பாதி புல்லரிக்க வைக்கிறது என்றும், படம் வேற மாதிரி வேற மாதிரி என்றும் ட்விட்டரில் சினிமா ரசிகர்கள் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். யஷ் எவ்வளவு பில்டப் கொடுத்து நடித்தாலும் அது அவருக்கு சரியாக பொருந்தியுள்ளது. விஜய் நடிப்பில் நேற்று வெளியான பீஸ்ட் படத்தைவிட கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் :
ரசிகர்களின் ஸ்டார் ரேட்டிங் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்