Legendary Cars: டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் ஆல் டைம் லெஜண்டரி கார்களின் டாப் 7 லிஸ்ட் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


மஹிந்திரா பொலேரோ


மஹிந்திரா பொலேரோ, மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தந்த மாடல்களில் ஒன்றாகும். இது டாடா சுமோவிற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் கிராமப்புற சந்தைகளிலும் கூட விரைவில் BOLERO பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சில ஆண்டுகளுக்கு 4x4 எடிஷன் கூட இருந்தன. பொலேரோ இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானது மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது.


மஹிந்திரா ஸ்கார்பியோ


மஹிந்திரா ஸ்கார்பியோ இந்திய வாகனத் துறையில் மிகச்சிறந்த எஸ்யூவிக்களில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இக்கட்டான சூழலில் மஹிந்திரா நிறுவனத்தை காப்பாற்றியதோடு நிறுவன பிராண்டையும் பொதுமக்களிடையே பிரபலப்படுத்தியது. இது வலுவாக கட்டமைக்கப்பட்டு இருந்ததோடு, 4x4 விருப்பமும் பெற்று மிகவும் திறமையானதாக இருந்தது. ஸ்கார்பியோ N என்று அழைக்கப்படும் ஆல்-நியூ ஜெனரேஷன் எடிஷனுடன் இன்று வரை அதே வடிவத்தில் ஸ்கார்பியோ விற்பனை செய்யப்படுகிறது.


மஹிந்திரா தார்:


மஹிந்திரா தார் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோடர்களில் ஒன்றாகும். அதன் திறன்களும் வலிமையும் ஒப்பிடமுடியாது மற்றும் தார் ஆர்வமுள்ள சமூகத்தையும் பிரதிபலிக்கிறது. தார் முதலில் 1950களில் வில்லியின் ஜீப்பில் மாடலின் தாக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் நிலைத்து நிற்கிறது.


டாடா சஃபாரி:


டாடா சஃபாரி முறையான எஸ்யுவி ஆக இந்திய சந்தையில் அறிமுகமான முதல் கார்களில் ஒன்றாகும். இது டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜினுடன் வந்தது. சாலைகளில் சஃபாரியை விட பயங்கரமான எதுவும் இல்லை.நாட்டின் அனைத்து சக்திவாய்ந்த மக்களாலும் முந்தைய தலைமுறை சஃபாரி பயன்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது மற்றும் குறைந்த வரம்பில் 4x4 அமைப்புடனும் வந்தது.


டாடா சியரா:


டாடா சியரா தான் டாடா தயாரித்த முதல் SUV ஆகும். ஆனால், வெறும் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டிருந்ததால், இது நடைமுறைக்கு உகந்ததாக கருதப்படவில்லை. இருப்பினும் இதன் வடிவமைப்பு கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. பின்பக்க கண்ணாடி பகுதி சாலையில் வேறு எந்த மாடலிலும் இல்லாத வகையில் இருந்தது. இது கார் ஆர்வலர்களுக்கு பிரபலமான காராக மாறியது. 


டாடா சுமோ


டாடா சுமோ ஒரு பெரும் வரலாற்றை கொண்டது. ஆனால் தர்போது அது பழைய வரலாறாகிவிட்டது. இது நடைமுறைக்கு ஏற்ற ஒரு சிறந்த வாகனமாகும். அதிகப்படியான பயணிகளையும்,  நிறைய சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும். சுமோ கிராமப்புறங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, மலைகளில் விருப்பமான வாகனமாக இருந்தது. இந்திய ராணுவத்தால் கூட பயன்படுத்தப்பட்டது. சுமோ ஒரு நடைமுறை எடிஷனிற்கு சரியான அர்த்தத்தை அளித்தது. டீசல் இன்ஜின் மற்றும் 4x4 விருப்பத்துடன் வந்தது. ஆனால் காலத்திற்கு ஏற்ப புதுப்பிப்புகள் இல்லாததால், டாடா சுமோ இந்திய சந்தையில் தாக்கத்தை இழந்தது.


டாடா இண்டிகா


டாடா இண்டிகா நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. டிரக் அல்லாமல் சாதாரண மக்கள் வாங்க மற்றும் பயன்படுத்தக்கூடிய முதல் வெகுஜன சந்தை காராக இண்டிகா இருந்தது. இது பல பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களுடன் வந்தது. மேலும் வாங்குவதற்கு மலிவாக இருந்தது. உட்புறத்தில் நல்ல இடவசதியையும் கொண்டிருந்தது. இண்டிகா அந்த நேரத்தில் ஸ்டேண்டர்டை நிர்ணயித்தது மற்றும் டாடாவின் வாகன வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருந்தது.


Car loan Information:

Calculate Car Loan EMI