Bhavana: நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.. நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? நடிகை பாவனா வேதனை!

தனது கடத்தல் தொடர்பான ஆதாரங்களைக் கொண்டிருந்த மெமரி கார்டை சட்டவிரோதமான முறையில் பலர் கையாண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நடிகை பாவனா தெரிவித்துள்ளார்

Continues below advertisement

தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நடிகை கடத்தல் வழக்கு

கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட நிகழ்வு தென் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு பின் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து  வருகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை பாவனா தரப்பில் முக்கிய ஆதாரமாக வீடியோ ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  நீதிமன்ற காவலில் இருந்த இந்த மெமரி கார்ட் சட்டவிரோதமாக மூன்று முறை கையாளப்பட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு  கேரள தடயவியல் துறை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கேரள நீதிமன்றக் காவலில் இருந்த இந்த மெமரி கார்டை எர்ணாகுளம் மாவட்ட நீதிபதியின் அசிஸெடெட்ன் லீனா ரஷீத், மற்றும் விசாரணை நீதிமன்ற அதிகாரி  தாஜுத்தீன் சட்டவிரோதமாக கையாண்டிருப்பது தெரியவந்துள்ளது தெரியவந்துள்ளது.

தனது தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியான முறைகேடுகள் நடந்ததுள்ளது பற்றி தனது அதிருப்தியை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பாவனா.

 நீதி கிடைக்கும் வரை போராடுவேன்:

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “தனியுரிமை என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமை, ஆனால் இது இந்த நாட்டின் அரசியலமைப்பால் எனக்கு வழங்கப்பட்ட உரிமை. காட்சிகள் அடங்கிய மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டது. மேலும் இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. 

பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றமே பாதிக்கப்பட்டவர்களை உடைத்தெறிந்து குற்றவாளிகளை பெருமைப்படுத்தும் செயலை செய்கிறது. இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன்.

 

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன். சத்யமேவ ஜெயதே.” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola