சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 'கென்னடி' திரைப்படம், 2023 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் நள்ளிரவு திரையிடலின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. 


கென்னடி படத்திற்கு 7 நிமிட கைதட்டல்


இயக்குனர் அனுராக் காஷ்யப் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த நிகழ்வின் வீடியோக்களின் முக்கிய அம்சங்களின் தொகுப்பை மட்டும் வெளியிட்டிருந்தார். அதில் பார்வையாளர்கள் அவரது படத்தைப் பாராட்டுவதைக் கான முடிகிறது. சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் ஆகியோரும் அந்த வீடியோவில் காணப்படுகின்றனர். படத்திற்கு 7 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.






கேன்ஸ் விழாவில் கென்னடி


இந்தத் திரைப்படம் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு முன்னாள் காவலரைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. நீண்ட காலமாக இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அவர், பின்னால் இருந்து ஊழல் சூழ்ந்த அமைப்பை சரிசெய்யும் வேலையில் இருக்கும் அவர், அதிலிருந்து சமூகத்தை மீட்பது கடையாக உள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழா 2023 இல் மிட்நைட் திரையிடலுக்கு இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு படங்களில் 'கென்னடி'யும் ஒன்று.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை


சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அந்த நிகழ்விற்கு சென்றதை பகிர்ந்துள்ளார், அதில் அவர், "#கென்னடியின் உலக அரங்கேற்றம் மற்றும் இந்திய சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன். எனக்கும், ஒட்டுமொத்த குழுவுக்கும் இது ஒரு அற்புதமான தருணம்!" என்று எழுதி இருந்தார். அவர் மற்றொரு பதிவில், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் அவரது இணை நடிகருமான ராகுல் பட் உடன் போஸ் கொடுப்பதை பதிவிட்டுள்ளார்.






பெருமைமிகு தருணம்


அந்த பதிவில், "இதுவரையிலான எனது தொழில் வாழ்க்கையின் பெருமைமிகு தருணம்! இந்த தருணத்திற்கு இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு நன்றி! மேலும் இந்த அற்புதமான படத்தில் என்னை உங்களுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக ராகுலுக்கும் நன்றி!," என்று எழுதியுள்ளார். இந்த நிகழ்விற்கு சன்னி லியோன் இருபக்க தோள்பட்டைகளும் பெரிதாக தைக்கபட்ட பிங்க் நிற கவுனை அணிந்திருந்தார். மேலும் தலைமுடியை நேர்த்தியாக கட்டி வைத்திருந்தார். அதோடு வைர காதணிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஹீல்ஸ் அணிந்திருந்தார். அதேசமயம், அனுராக் கருப்பு ஜோத்பூரி உடையை அணிந்திருந்தார், ராகுலும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.