கீர்த்தி சுரேஷ் நடித்து அண்மையில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் திரையிடலின்போது ரசிகர் ஒருவர் செல்ஃபீ எடுக்க வந்தபோது கீர்த்தி சுரேஷ் தனது மார்பை மறைத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை சமாளித்துக், திரையுலகில் தன்னுடைய தனி அடையாளத்தை உருவாக்கியவர். இயக்குனர் ஏ. எல். விஜய் தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த படம் உருவானது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார். மகாநடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்த நடித்த ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’, ‘வசி’, ‘ரகுதாதா’, ‘சாணி காகிதம்’ போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியில் பெரிதும் வெற்றி பெற முடியவில்லை. அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ
ரிவால்வர் ரீட்டாவின் திரையிடலின் போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது கீர்த்தி சுரேஷூடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்கையில் கேமராவை மேலே உயர்த்தினார். உடனே தனது மார்பை மறைத்துக்கொண்ட கீர்த்தி ரசிகரிடம் ஃபோனை கீழே இறக்க சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகரிடம் கீர்த்தி சுரேஷ் இப்படி நடந்துகொண்டதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
அண்மையில் ஏஐ மூலம் தன்னுடைய போலி வீடியோ மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டது குறித்து கீர்த்தி சுரேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் தவறான கண்ணோட்டத்தில் சில பத்திரிகையாளர்கள் வேண்டுமென்றே புகைப்படம் எடுப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார்.