பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகை திவ்யா கோஸ்லா குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சத்யமேவ ஜெயதே 2. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் ஜான், நடிகை திவ்யா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் நிக்கில் அத்வானி உள்ளிட்டோர் ஹிந்தியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கேபிசி சீசன் 13 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சி சம்பந்தமான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் அமிதாப் பச்சன் முன்பு கால் பந்து சாகசங்களை செய்த ஜான் தனது மார்பகத்தில் அடிப்பட்ட கதையை அபிதாப் பச்சனுக்கு விளக்கினார்.
இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறும் போது, “ நான் அப்போது கல்லூரி படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, டேக்வாண்டா போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்தேன். ஒரு முறை தாய்லாந்தில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்றேன். அந்த போட்டியின் ஒரு சுற்றில் எதிர் பாக்ஸ்ர் எனது நெஞ்சில் ஓங்கி குத்தினார். அதன் பின்னர் அவரை குத்த முயன்ற நான் எனது நெஞ்சிலே குத்திக் கொண்டேன். அதில் எனது நெஞ்சு பிளந்துவிட்டது” என்றார்
மேலும் நிகழ்ச்சியிலேயே சட்டையை கழற்றி அந்த காயத்தின் தழும்பையும், தனது சிக்ஸ் பேக்கையும் காண்பித்தார். இதைப் பார்த்த அபிதாப்பச்சன் ஷாக்காகி நின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போது 3000த்துக்கு அதிகமான பார்வையாளர்கள் லைக் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்