விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் அறிமுகமான சைத்ரா ரெட்டிஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ‘ யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ஸ்வேதா என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான இவர் அதனைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில்  ‘ராஜா ராணி புகழ்’ சஞ்சீவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


இவர் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சம்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் நெருங்கி இருக்கும் பலப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த சைத்ரா ரெட்டி தற்போது இருவரும் பனிப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வீடியோ தனது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.