பொதுவாகவே கவிஞர்கள் இளகிய மென்மையான மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். எழுத்துக்கள் மூலம் மனிதர்களின் மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் கற்பனை வளம், வார்த்தை ஜாலம், ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்துதல் என பல இயல்புகள் அவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். அப்படியான கவிஞர்தான் கவியரசு வைரமுத்து. 


 



ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க:



கவியரசு வைரமுத்துவின் படைப்புகள் எத்தனையோ உண்டு. எண்ணிக்கையில் அடங்கா ஏராளமான படைப்புகளில் ஒன்றான மனதை உருக்கும் "ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க..." எனும் இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம் நம்மை அறியாமலேயே நமது மனங்கள் உருகும். இந்த அருமையான பாடலுக்கு நார்வே நாட்டில் கலை பள்ளி நடத்தி வரும் ஆசிரியரான கவிதா லட்சுமி அபிநயம் புரிந்துள்ளார். தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆசிரியை கவிதா லட்சுமி ' ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க...' என்ற பாடலுக்கு அபிநயம் புரிந்ததை பார்த்த கவியரசு வைரமுத்து மனம் நெகிழ்ந்து தனது ட்விட்டர் பக்கம் மூலம் அந்த ஆசிரியைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வைரமுத்துவின் ரசிகர்கள் தங்களின் கமெண்ட் மூலம் தமிழுக்கு அவர் செய்யும் பெருமையை போற்றி வருகிறார்கள். 


 






 


மொழி மாற்றம் செய்யப்பட வேண்டிய பாடல் :


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆணவம் அகங்காரம் என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் அளவிற்கு சக்தி பிடித்து இருக்கும் இந்த பாடலில் கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகள். இந்த பாடல் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே கவிஞர் வைரமுத்து ரசிகர்களின் வேண்டுகோள். உலகில் எந்த ஒரு கவிஞனும் இறப்பின் நிகழ்வை பற்றி இத்தனை அருமையாக  எழுதியிருக்க முடியாது. நம் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி செல்ல வேண்டும் என்பது தான் கவிஞர் வைரமுத்துவின் மனமார்ந்த ஆசை. 


 


மொழிபெயர்க்கப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம்: 


சமீபத்தில் தான் கவிஞர் வைரமுத்துவின் நாவலான சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் என 23 மொழிகளில் மொழிபெயராக்கப்பட்டு வருகிறது.  அந்த மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ‘தி சாகா ஆஃப் 'தி காக்டஸ் லேண்ட்’ எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. 



துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரைஸ்’ மாநாட்டில் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட பிரதிநிதிகள் பெற்று கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி நடைபெற்றது. கவிஞர் வைரமுத்துவின் இந்த அற்புதமான படைப்பும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது.