கவின்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் கவமீர்த்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற கவின் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடிக்கத் தொடங்கினார். டாடா, ஸ்டார் , பிளடி பெக்கர் என மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து சிறப்பாக நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். இதில் டாடா மற்றும் ஸ்டார் திரைப்படம் கமர்சியலான வெற்றியை பதிவு செய்தன. பிளடி பெக்கர் படம் வசூல் ரீதியாக சறுக்கினாலும் விமர்சன ரீதியாக அங்கீகாரம் பெற்றது.

அந்த வகையில் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் கவின் . சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில்  கவின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு கிஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். டாடா பிளடி பெக்கர் படத்தைத் தொடர்ந்து ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரோமியோ பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. டைட்டிலை வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது