இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது கோன் பனேகா கோரோர்பதி (கேபிசி) தான்.


பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஏற்கெனவே ஹிமானி பண்டேலா , சஹில் ஆதித்யா அஹிர்வார் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்று அசத்தியுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியின் வீக்கெண்ட் எபிசோட் எப்போதுமே ரொம்பவும் சுவாரஸ்யமாக நடத்தப்படும்.
அந்த வரிசையில், இந்த வீக்கெண்ட் எபிசோடில், கீர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் கலந்து கொள்கின்றனர்.
ஹாட் சீட்டில் இவர்கள் அமர்ந்து கொள்ள அமிதாப் கேள்விகளை கேட்கவிருக்கிறார். பொதுவாக இதுபோன்ற செலிப்ரிட்டிகள் கேபிசியில் கலந்து கொள்ளும்போது அவர்கள் வெல்லும் பரிசுத் தொகையானது ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும்.


அண்மையில் கூட இந்நிகழ்ச்சியின் வீக்கெண்ட் எபிஸோடில் தீபிகா படுகோனே, பர்ஹான் அக்தார் ஆகியோர் கலந்து கொண்டனர். மன அழுத்தத்தில் இருப்போரை மீட்பதற்காக தான் நடத்தும் லிவ், லாஃப், லவ் அமைப்புக்காக நிதி திரட்டிக் கொண்டார்.


இந்த வார எபிஸோடில் கலந்து கொள்ளும் கீர்த்தி சனோன், அமிதாப் பச்சனிடம் மண்டியிட்டு தனது காதலைச் சொல்வதைப் போல் ஒரு புரோமோ வெளியாகி உள்ளது. மேலும், அவருடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. துனியா என்றா காதல் பாடலுக்கு கசிந்துருகும் ஆட்டம் போடுகின்றனர். 






கீர்த்தி சனோனும், ராஜ்குமார் ராவும் சேர்ந்து ஹம் தோ ஹமாரா தோ என்ற படத்தில் நடித்துள்ளனர். 
கேபிசி 13ல் கடைசியாக சஹில் ஆதித்யா என்பவர் ரூ.1 கோடி பரிசு வென்றார். அவர் தன்னை டாப்ஸி பன்னுவின் தீவிர ரசிகர் என்றும். அவருக்காக சோலே பட்டூரே தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் பிறந்தவர் சஹில். இவருடைய தந்தை உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். தொடக்கத்தில் அனைவரை போலவும் சஹிலுக்கு படிப்பு மீது அதிகளவில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது.


இதனால் அவர் பள்ளியை பாதியில் பங்க் செய்து விட்டு நண்பர்களுடன் சென்று விளையாடி கொண்டி வந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய குடும்ப சூழலை அறிந்த சஹில் படிப்பு தான் அவர்களுடைய குடும்பத்தை முன்னேற்றும் என்று உணர்ந்துள்ளார். அன்று முதல் தீவிரமாக படிக்க தொடங்கியுள்ளார். முன்பு ஒரு காலத்தில் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் எடுக்கவே தடுமாறிய சஹில் பின்னர் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்தார். மேலும் தன்னுடைய பட்டப்படிப்பிற்கு பின்பாக ஐஏஸ் தேர்வு எழுத உள்ளதாகவும் சஹில் கூறியுள்ளார்.




இதற்காக தயாராகும் போது தான் பொது அறிவு தொடர்பான புத்தக்கங்களை படித்துள்ளார். அந்தப் புதக்கங்கள் இவர் தற்போது கேபிசியில் ஒரு கோடி வெல்ல உதவியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வென்றவர்களுக்கு கேட்கப்படும் 7 கோடி ரூபாய்  ஜாக்பாட் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் தெரியவில்லை என்பதால் சஹில் 1 கோடி ரூபாயுடன் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். ஜாக்பாட் பரிசை பெறவில்லை என்றாலும் ஒரு கோடி பரிசை வென்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 19 வயது இளைஞர் வென்றது தான் பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.