கத்ரீனா பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்


அமெரிக்காவில் கத்ரீனா கைஃப் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கணவருடன் சுற்றுலா சென்றுள்ள கத்ரீனா, நியூயார்க்கில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


காதல்- திருமணம்


பாலிவுட் திரையுலகின் பிரபலமான கத்ரினா கைஃபுக்கும் நடிகர் விக்கி கௌசலுக்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு காதலித்த தருணங்களில், இருவரும் பல இடங்களுக்கு சென்றனர். அந்த தருணங்களிலே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.


அமெரிக்கா சுற்றுலா:


 கோடையை கழிப்பதற்காகவும் நிக்கி கௌசலின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவும் கத்ரீனா கைஃப்பும் விக்கி கௌசலும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளனர். கத்ரினா கைப் தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உடையவர். உடற்பயிசியின் மூலம் தனது உடலை ஃபிட்டாக வைத்துள்ளார். இந்நிலையில் நியூயார்க்கில் உடற்பயிற்ச்வி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்


ஆச்சரியத்தில் ரசிகர்கள்:


சுற்றுலா தருணத்திலும் கத்ரீனா கைஃப் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிறந்தநாள் வாழ்த்து:


 






 நேற்றைய தினமான மே-16 ஆம் தேதி நிக்கி கௌசலின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் கத்ரீனா கைஃப் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அதில் பிறந்த வாழ்த்து தெரிவித்து, நீ எல்லாத்தையும் சிறப்பாக்கியுள்ளாய் என்று பதிவிட்டுள்ளார்.


Also Read:KGF Chapter 2: ஓடிடியில் வெளியானது கேஜிஎஃப் 2.. ஆனால் ஒரு சின்ன மாற்றம்.. இதுதான் தகவல்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண