நானே வருவேன் திரைப்படம்:


தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தில், தனுஷ் ஹீரோ-வில்லன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அண்ணன் தம்பியான செல்வராகவன்-தனுஷ், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படத்தையடுத்து நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளதுள்ளனர். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்தினம் இப்படம் ரிலீஸாகவுள்ளதால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. 


தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு கரம் பிடித்தார் நடிகர் தனுஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனுஷும்-ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறவுள்ளதாக அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இந்த விஷயம் கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. சிறிது நாட்களுக்கு பிறகு இவையனைத்தும் ஓய்ந்த நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி, வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வெற்றியை பெற்றது. இதையடுத்து, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் பிசியாகிவிட்டார் நடிகர் தனுஷ். நானே வருவேன் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தனுஷின் விவாகரத்து குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 


கடுப்பான கஸ்தூரி ராஜா!


கும்மி பாட்டு, வீர தாலாட்டி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பிரபலமான படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. தனுஷின் முதல் படமான துள்ளவதோ இளமை படத்தையும் இவரே இயக்கியிருந்தார்.




நானே வருவேன் படம் வெளியாகவுள்ளதையடுத்து, படம் குறித்த கேள்விகள் கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டன. அப்போது, ஒருவர் “தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து” குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி நீங்க கேட்க கூடாது” என டென்ஷனாக பதிலளித்தார். மேலும், “இதனாலதான் மீடியாவ மீட் பன்றதில்ல..” எனவும் கேள்வி கேட்டவரை கடிந்து கொண்டார். 


நானே வருவேன் குறித்து கஸ்தூரி ராஜாவின் கருத்து:


பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது என ஆங்காங்கே சர்ச்சை கருத்து நிலவி வருகின்றன. இதனால் நானே வருவேன் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் திரையிலக ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. இந்த கேள்வியும், கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்படி ரிலீஸான ஒரே சமயத்தில் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றுள்ளன” என்று கூறிய அவர், அதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய நாட்டுப்புற பாட்டு படத்தையும், விஜயகாந்த் நடித்து வெளியான கேப்டன் பிரபாகரன் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சின்ன தம்பி படத்தையும் கூறினார். இதனால், நல்ல படமாக இருந்தால் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என அவர் தெரிவித்தார். 


நானே வருவேன் படத்திற்கு காலை 8 மணி காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு மறுநாள் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கு காலை 4 மணி காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த கேள்வியும் கஸ்தூரி ராஜாவிம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பட ரிலீஸின் முதல் நாளில் தர்ணா உள்ளதால் 8 மணி காட்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மாறவும் செய்யலாம்” என அவர் பதிலளித்தார்.