தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதால் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். கஸ்தூரியை நடிகையாக தெரிந்த பலருக்கும் அவரைப் பற்றி தெரியாத பல தகவல்களை கீழே விரிவாக காணலாம்.



  • நடிகை கஸ்தூரி 1992ல் மிஸ் சென்னை பட்டம் பெற்றவர்.

  • மிஸ் இந்தியா பட்டத்திற்கான போட்டியில் பிரபல பாலிவுட் நடிகைகள் சுஷ்மிதா, ஐஸ்வர்யா ராயுடன் போட்டியிட்டவர் கஸ்தூரி.

  • கஸ்தூரியின் தாயார் சுமதி வழக்கறிஞர். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.

  • கஸ்தூரியின் இயற்பெயர் ஷன்மதி ஆகும்.

  • தனது தாயாரைப் போலவே நடிகை கஸ்தூரியும் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார்.

  • கஸ்தூரியின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். கஸ்தூரியின் கணவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

  • மிஸ் சென்னை பட்டம் பெற்றதையடுத்து, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா எடுத்த 'ஆத்தா உன் கோவிலிலே' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

  • தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மனின் பெயரை ஷன்மதிக்கு வைத்தார் கஸ்தூரிராஜா. இதையடுத்தே ஷன்மதி கஸ்தூரியானார்.

  • பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் தமிழில் நாயகனாக நடித்துள்ளார்.

  • இந்தியன் படத்தில் கமலின் மகளாக நடித்தது அவரை தென்னிந்தியா முழுக்க பெயர் வாங்கிக்கொடுத்தது.

  • தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரியின் கணவரே ஒரு தெலுங்கர் ஆவார். இவர் வெளிநாட்டில் மருத்துவராக இருந்தவர்..

  • போதிய பட வாய்ப்புகள் இல்லாத இவர் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.

  • தனது மனோதிட தைரியத்திற்கு காரணம் இளையராஜா, எழுத்தாளர் புதுமைபித்தன், ஷிர்டி சாய்பாபா என்று பலமுறை கூறியுள்ளார்.


இவ்வாறு பலரும் அறியாத பல தகவல்களை தன்னகத்தே கொண்ட கஸ்தூரி, கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சை கருத்துக்களை கூறி தற்போது தெலுங்கு மக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 1991ம் ஆண்டு முதல் நடித்து வரும் கஸ்தூரி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம்  ஆகிய  படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக அவர் தமிழில் ஸ்ட்ரைக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியின் காட்பாதர், சிம்பா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.