TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
அரசுப் பேருந்துகளில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி பல மாவட்டங்களுக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பேருந்துகளை இயக்கி வருகிறது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகளை தொடர்ந்து இயக்கி வருகிறது.
90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு:
Just In




அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இருந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த முன்பதிவு கால அவகாசத்தை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று முதல் அமல்:
இதுதொடர்பாக, அரசுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள பதிவில் பயணிகள் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று மதியம் 12 மணி முதல் 90 நாட்களுக்கு முன்பே இணையதளத்தில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்கள் என உயர்த்தி நவம்பர் 18ம் தேதி மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.
பயணிகள் தங்களது கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.