11 வயது மூத்த நடிகருடன் காதலில் ஶ்ரீலீலா...அதற்குள் திருமண பேச்சும் தொடங்கியாச்சா!
இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ஶ்ரீலீலா பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஶ்ரீலீலா
ஒவ்வொரு ஆண்டும் பல புதிய முக நடிகைகள் திரையுலகில் அறிமுகமாகி வருகிறார்கள். அதில் அதிகப்படியான ரசிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஶ்ரீலீலா. 23 வயதேயான ஶ்ரீலீலா தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திலும் கிஸ்ஸிக் பாடலில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் ஶ்ரீலீலா. பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் ஶ்ரீலீலா காதலித்து வருவதாக அண்மை காலங்களில் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் இந்த தகவலை கார்த்திக் ஆர்யனின் தாய் கிட்டதட்ட உறுதிபடுத்தியுள்ளார்
கார்த்திக் ஆர்யனை காதலிக்கிறாரா ஶ்ரீலீலா
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் கார்த்திக் ஆர்யன். சமீபத்தில் நடைபெற்ற IIFA விருது விழாவில் இவரது அன்னையிடம் கார்த்திக் ஆர்யனின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் எங்கள் வீட்டிற்கு மருமகளாக வருபவர் ஒரு டாக்டராக தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கார்த்திக் ஆர்யன் மற்றும் ஶ்ரீலீலாவும் டேட் செய்து வருவதாக தகவல் வெளியாகின. கார்த்திக் ஆர்யனின் தங்கை மருத்துவ படிப்பை முடித்ததை அவரது குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் ஶ்ரீலீலாவும் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
Just In




சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் கார்த்திக் ஆர்யனின் அன்னை சொன்னது போல் ஶ்ரீலீலாவும் தற்போது மருத்துவ படிப்பை தொடர்ந்து வருகிறார். இதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு இருவரும் காதலிக்கும் தகவல் உண்மை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்தியில் அனுராக் பாசு இயக்கவிருக்கும் படத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஶ்ரீலீலா இணைந்து நடிக்க இருக்கிறார்கள். கார்த்திக் ஆர்யன் மற்றும் ஶ்ரீலீலாவுக்கு இடையில் 11 ஆண்டு வயது வித்தியாசம் இருப்பது குறிப்பிடத் தக்கது.