சூர்யா 44 டைட்டில் டீசர்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூர்யா 44 . பூஜா ஹெக்டே , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் , ஷ்ரேயா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெழியிட்டுள்ளது.
கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் சூர்யா கம்பேக் கொடுக்க வேண்டும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சூர்யா 44 படத்தின் அறிவிப்பு அவர்கள் உற்சாகத்தை கொடுத்துள்ளது