இன்றைய தினம் தீபங்களின் திருநாளான கார்த்திகை தீபம் உலகம் எங்கும் உள்ள மக்களால் கொண்டாப்பட்டு வருகிறது. வீடுகளை தீபங்களால் அலங்கரித்து வழிபடும் இந்த நாளில் நம் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ள பல தீபம் சார்ந்த திரைப்பாடல்களை பற்றின ஒரு கண்ணோட்டம் இதோ உங்களுக்காக :
வீரா (1994) :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, ரோஜா, ஜனகராஜ், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த வீரா திரைப்படத்தில் ஸ்வர்ணலதா குரலில் இடம்பெற்ற "மலை கோவில் வாசலில்..." பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
சாமுண்டி (1992) :
நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை கனகா நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான சாமுண்டி திரைப்படத்தில் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் 'ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம்...' பாடல் கே.எஸ். சித்ராவின் குரலில் இடம்பெற்றுள்ளது.
தேவராகம் (1996) :
ஸ்ரீதேவி, அரவிந்த்சாமி நடிப்பில் எம்.எம் கீரவாணியின் இசையில் தேவராகம் திரைப்படத்தில் இடம் பெற்ற "அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்..." பாடல் கே. எஸ். சித்ராவின் குரலில் காதுகளுக்கு இனிமை சேர்க்கும் ஒரு கார்த்திகை தீப திருநாள் சிறப்பு பாடலாகும்.
வானத்தை போல (2000) :
எஸ். ஏ. ராஜ்குமாரின் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதாவின் குரலில் வானத்தை போல திரைப்படத்தில் ஒலித்த 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...' பாடலை யாராவது மறக்கமுடியுமா என்ன. விஜயகாந்த், மீனா, பிரபுதேவா நடிப்பில் வெளியான இந்த பாடல் இன்றும் பலரின் விருப்பமான பாடலாகும்.
மனசெல்லாம் (2013)
ஸ்ரீகாந்த் மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான மனசெல்லாம் திரைப்படத்தில் இடம் பெற்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் சாதனா சர்கம் பாடிய 'கையில் தீபம் ஏந்தி வந்தோம்...' பாடல் கார்த்திகை தீப ஒளி திருநாளுக்கு ஏற்ற ஒரு பாடலாகும்.
தேவதை (1997) :
வினீத் மற்றும் கீர்த்தி ரெட்டி நடிப்பில் வெளியான தேவதை படத்தில் இடம் பெற்ற இசைஞானி இளையராஜாவின் 'தீபங்கள் பேசும்...' பாடலை பாடியிருந்தார்கள் எஸ்.பி.பி. சரண், சந்தியா மற்றும் கே.பி. மோகன்.
சூர்யவம்சம் (1997) :
நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி நடிப்பில் வெளியான சூர்யவம்சம் திரைப்படத்தின் மிகவும் பிரபலமான பாடலாக 'நட்சத்திர ஜன்னலில்...' பாடலுக்கு கார்த்திகை தீபத்திற்கு ஏற்ற ஒரு சிறப்பான பாடலாகும். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் மனோ மற்றும் சுனந்தா இந்த பாடலை பாடியிருந்தனர்.
சந்தித்தவேலை (2000) :
கார்த்திக், ரோஜா, அஜித்குமார் நடிப்பில் வெளியான சந்தித்தவேளை திரைப்படத்தில் தேவாவின் இசையில் உன்னிக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா பாடிய 'பெண் பெண் கிளியே...' பாடலும் ஒரு அருமையான கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பாடலாகும்.
இப்படி கார்த்திகை தீபத்தை கொண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில பாடல்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்!!!