தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியிடம் குருஜி கார்த்திகை தீபத்திற்காக வேறொரு நாள் குறித்து கொடுத்திருப்பதாக சொன்ன அந்த தினத்தில் தீபம் போட எல்லோரும் தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது குருஜி குறித்து கொடுத்த நேரத்தில் மூன்று பேரும் சேர்ந்து தீபம் போட்டு பூஜையை நல்லபடியாக செய்து முடிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் தீபா ஆபீசுக்கு கோபமாக கிளம்பி வருகிறாள்.


ஆபீஸ்க்கு வந்த அவள் பத்து நிமிஷம் வேலைன்னு தானே சொன்னிங்க, என் வீட்டுல முக்கியமான பூஜை இருக்குன்னு சொல்லித்தான் உங்ககிட்ட அனுமதி கேட்டேன் அப்படி இருக்கும்போது ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க சினேகா நல்ல வேஷம் போட இத நீங்க பிளான் பண்ணி தான் பண்னிங்கன்னு எனக்கு தெரியும் என தீபா பதிலடி கொடுக்கிறாள்.


இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக ஒரு கட்டத்தில் சினேகா தீபாவை அடிக்க கை ஓங்க தீபா அவளது கையைப் பிடித்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் அவள் கேபினுக்கு சென்று விடுகிறாள்.


பிறகு சினேகாவின் கேபினுக்குள் தீபா செல்ல,  சினேகா, என்ன மன்னிப்பு கேட்க வந்தியா என்று கேட்க தப்பு பண்ணாம நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் அதுக்கு எல்லாம் அவசியமில்லை என்று சொல்கிறாள். நீங்க என்னை விட உயர் பதவியில் இருக்கீங்க உங்கள அவ்வளவு பேரும் முன்னாடி வச்சு அடிச்சா நல்லா இருக்காது என்று சொல்லி ரூமுக்குள் வைத்து அறைகிறாள்.


பிறகு ஆபீஸ் வரும் கார்த்தியும் சினேகாவை பிடித்து திட்ட அவள் அழுது வேஷம் போட்டு தீபா தன்னை அடித்த விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Chennai Rain 8 Death: மிக்ஜாம் புயலால் எவ்வளவு உயிரிழப்பு? போக்குவரத்து மாற்றம்? மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் லிஸ்ட்! - முழு விவரம்


CM Stalin On michaung: ரூ.4,000 கோடி செலவு வீணா? சென்னை எத்தனை நாளில் சீரடையும்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்