ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் பற்றி பார்க்கலாம்!


கார்த்திகை தீபம்:


முந்தைய எபிசோடுகளில் தாத்தா வைத்த சமையல் போட்டியில் தீபா ஜெயித்துக் காட்டிய நிலையில், அடுத்ததாக இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க... 


தாத்தா மூன்றாவது போட்டி குறித்து சொல்கிறார், இந்தப் போட்டியில் தீபாவும் அபிராமியும் போட்டி போட உளளதாகக் கூறுகிறார். அதாவது கார்த்தி குறித்து அபிராமி மற்றும் தீபாவிடம் கேள்விகளைக் கேட்பேன், இருவரில் யார் கார்த்தியை சரியான அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கண்டு பிடிப்பது தான் இந்தப் போட்டி என்று சொல்கிறார். 




பிறகு போட்டி தொடங்குகிறது. தாத்தாவும் கார்த்தியும் நடுவில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விகளாக தீபா மற்றும் அபிராமியிடம் கேட்க, தீபா ஒவ்வொரு கேள்விக்கும் கார்த்தி சொன்ன விஷயங்களையெல்லாம் வைத்து யோசித்து சரியான பதிலைச் சொல்கிறாள். அபிராமி தொடர்ந்து தவறான பதில்களை சொல்லி வர, கார்த்திக்கோ, “அம்மா என்ன இப்படி தப்பு தப்பா பதில் சொல்றாங்க” என்று யோசிக்கிறான்.




இப்படி இருவரும் தங்களது பதில்களை சொல்ல, போட்டியின் இறுதியில் தீபா அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி இருப்பதாகவும், தீபா தான் வெற்றி பெற்றதாகவும் தாத்தா அறிவிக்கிறார். உடனே அபிராமி கோபத்துடன் எழுந்து வெளியே செல்கிறாள்.  இப்படியான சூழலில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன?