ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான கார்த்திகை தீபத்தில் இன்றைய எபிசோடில் நடப்பது என்ன எனப் பார்க்கலாம்.


நேற்றைய எபிசோடில் மைதிலி ஐஸ்வர்யாவை கூட்டி சென்று முதலிரவு ஏற்பாடு செய்த ரூமை காட்டி கடுப்பாக்கினாள். ஐஸ்வர்யா இதையெல்லாம் பார்த்து என்ன இதெல்லாம் என்று கோபப்பட, மைதிலி “எல்லாம் முறைப்படி தான் நடக்குது” என்று பதிலடி கொடுக்கிறாள்.


அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா வெளியே வரும்போது, தர்மலிங்கத்திடம் பணம் கொடுத்தவர் வந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்க, “அவர் பொண்ணு, மாப்பிளை மறு வீட்டிற்காக வந்திருக்காங்க, நான் கூடிய சீக்கிரம் பணத்தை கொடுத்து விடுகிறேன்” என தர்மலிங்கம் பேசிக் கொண்டிருக்கிறார்.



 


இதனைப் பார்த்த ஐஸ்வர்யா, ”நேரா ரூமுக்குச் சென்று தனது பேக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தீபாவின் பேக்கில் வைக்கிறாள். அடுத்ததாக கார்த்தி, தீபா ஆகியோர் வீட்டிற்கு கிளம்பும் போது, தர்மலிங்கம் கார்த்தி வீட்டிற்கு வந்த போது வீட்டிற்குள் சேர்க்காமல் கோபப்பட்டது பற்றி எல்லாம் பேசி வருத்தம் தெரிவிக்க, கார்த்திக் ”அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை” என்று பேசுகிறான். 


பின்னர் தர்மலிங்கம் ரெண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்க சொல்ல, ஜானகி ஆரத்தி எடுக்க கார்த்திக் பணத்தை போட பர்ஸை எடுக்க அதில் பணம் இல்லாததால் ஐஸ்வர்யா நான் தரேன் கார்த்திக் என தனது பேக்கை திறந்து பார்த்து விட்டு இதில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை, இவங்க தான் எடுத்து இருக்கணும் என என தீபா குடும்பத்தின் மீது பழி சொல்கிறாள். 


கார்த்திக் இவங்க யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல, ஐஸ்வர்யா “என்னுடைய மன திருப்திக்காக தேடி பார்க்கிறேன்” என்று வீடு முழுவதும் தேடி விட்டு பிறகு தீபாவின் பேக்கை வாங்கி பார்க்கிறாள். அதில் பணம் இருக்கிறது.




“இது என்னடி?” என்று ஐஸ்வர்யா அதட்டிக் கேட்க, தீபா ஒன்றும் புரியாமல் தயங்கி நிற்க , கார்த்திக், “நீங்க கொடுத்த பணம் தான் அண்ணி, தீபா அண்ணி மறுவீட்டுக்காக பணம் கொடுத்தாங்கல நன்றி சொல்லு” என்று சொல்ல, தீபாவும் நன்றி சொல்கிறாள். ஐஸ்வர்யா என்ன கார்த்தி என்று கோபப்பட அவன் ஐஸ்வர்யாவை தீபாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறான். 


“நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும், அதெல்லாம் கேட்க முடியாது”னு திமிராக ஐஸ்வர்யா பேச, “அப்படினா எங்களால் உங்க கூட வர முடியாது” என்று சொல்கிறான் கார்த்தி. உடனே ஐஸ்வர்யா, “நான் அத்தை கிட்ட பேசிக்கறேன்” எனக் கோபமாக கிளம்பி வந்து அபிராமியிடம் நடந்த விஷயங்களை சொல்ல, அவர் ஐஸ்வர்யாவை பளாரென அறைகிறார். இப்படியான நிலையில்  பரபரப்பாக இந்த எபிசோட் நிறைவடைகிறது.