கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'டி 43' என்ற பெயரில் தனுஷ் இணைவது நாம் அனைவரும் அறிந்ததே. தனுஷ் தற்பொழுது  இயக்குனர் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோயுடன் இணைந்து  ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நடித்து வருகிறார். இதனால் டி 43 படப்பிடிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது. ஹாலிவுட்  படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் 'டி 43' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்னும் தனுஷ் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .




அண்மையில் இயக்குநர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடனான சமூக ஊடக உரையாடலில், இளம் இயக்குனர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் .இந்த கேள்விக்கு நடுவில் சமீபத்தில் தளபதி  விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் மகேந்திரன், 'டி 43' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை கார்த்திக் நரேனிடம் கேட்டார் .




நடிகர் மஹேந்திரனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அவரின் கதாபாத்திரத்தின்  படப்பிடிப்பிகள் இன்னும் தொடங்க படவில்லை. இந்நிலையில் மகேந்திரனின் கேள்விக்கு "'டி 43' படப்பிடிப்பை விரைவில் தொடங்குவேன் என்றும், சத்ய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது என்றும், இப்படத்தில் மாளவிகா மோகன் நாயகியாக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசையுடன் இந்த படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும்" என்று இயக்குனர் பதில் கூறினார் .




இயக்குனர் கார்த்திக் நரேன் மலையாள திரைக்கதை இரட்டையர்களான ஷார்பு மற்றும் சுஹாஸ் ஆகியோரை படத்தின் எழுத்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்.நடிகர் பிரசன்னா ஏற்கனவே கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்துள்ளார் . மீண்டும் 'டி 43' யில் இணைகிறார் என்று இயக்குநர் கூறியுள்ளார் 




இந்நிலையில் , இயக்குநர்  ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷுடன் தொடங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே ,  ஜூன் மாதம்  இந்த ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டிருந்த படம் சில மாதம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது .  இன்னும் படத்திற்கான பெயர் அறிவிக்கப்படவில்லை . கற்பனை மற்றும்  அதிரடி நிறைந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்தார். தனுஷ் வந்து இணையும் வரை படத்திற்கான முன் தயாரிப்பு பணியை செய்து  வருகிறார். 


முதலில் நடிகர் தனுஷ் யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது விரைவில் வெளியாகும் .இன்னும் தனுஷ் இதை பற்றிய எந்த செய்திகளுக்கும் பதில் அளிக்கவில்லை அடுத்த அதிகார பூர்வ தகவலுக்காக காத்திருப்போம் . இதற்கிடையில் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் உடன் மீண்டும் தனுஷ் இணைவதாக ஒரு தகவல் உள்ளது. இப்படி பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ள தனுஷ், எந்த படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்பதை அவரது அமெரிக்க ரிட்டன் தான் முடிவு செய்யும்.