நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தமிழில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் விருமன். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் ஏமாற்றம் அடையும் நிலையில் விருமன் திரைப்படத்திற்கு காலை நான்கு மணி ஸ்லாட்டுகள் இல்லை.


 






விருமன் திரைப்படம் முதல் காட்சி நாளை காலை 7 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.  சமீபத்தில் லெஜென்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு நான்கு மணி ஸ்லாட்டுகள் கிடைத்திருந்தது. இந்த  நிலையில் விருமன் படத்திற்கு நாலு மணி ஸ்லாட் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் எழுந்துள்ளது.


மீண்டும் ஒரு கிராமத்து கதை!




தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.


 






இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின்  இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண