விருமன் படத்தில் அதிதி ஷங்கர் பாடிய பாடலால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிரபல பாடகி ராஜலட்சுமி விளக்கமளித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. 


இதன் காரணமாக படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குநர் என அனைவருமே தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முன்னதாக, விருமன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் விருமன் பட புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. அதிதி பாடிய மதுர வீரன் பாடல்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.






தமிழ் சினிமாவிலும் தனது முதல் டூயட் பாடலை விருமன் படத்தில் பாடியுள்ளார் அதிதி ஷங்கர். யுவன்  இசையில் விருமன் திரைப்படத்தில் "மதுர வீரன்" என்ற டூயட் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி என்றும், அவரது குரலை நீக்கிவிட்டு மீண்டும் அதிதி வைத்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்து யுவன் வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ராஜலட்சுமி, மதுரை வீரன் பாட்டை நான் பாடினது உண்மை தான். ஆனால அதிதி நல்லா பாடுறதுல்ல அவங்க பாட வச்சிருக்காங்க. சினிமாவில் இது சகஜமான விஷயம். ஆனால் எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு தொடர்ந்து அதிதியை விமர்சிக்கிறது வருத்தமா இருக்கு என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண