7 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் டப் செய்யப்படும் மெட்ராஸ் திரைப்படம்!

வடசென்னை மக்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் மெட்ராஸ் படத்தை கொடுத்திருப்பார் ரஞ்சித்

Continues below advertisement

தமிழில் வெளியாகி 7 வருடங்களுக்கு பிறகு கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் தெலுங்கில் தற்போது ரிலீஸாகவுள்ளது

Continues below advertisement

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் மெட்ராஸ். நடிகர் கார்த்தி, கெத்தரின் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். பாடல், பின்னனி இசை என படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது அவரின் இசை.


தொடர்ந்து கபாலி, காலா என ரஜினியை வைத்து பா.ரஞ்சித் படங்களை கொடுப்பதற்கும் மெட்ராஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியே காரணம்.  வடசென்னை மக்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை கொடுத்திருப்பார் ரஞ்சித். அதேபோல் வட சென்னை இளைஞராகவே வாழ்ந்திருப்பார் கார்த்தி. 

தானே கதை எழுதி...மலையாள இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன்

பொதுவாக ஒரு மொழியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் அது வேறு மொழியில் டப் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்று. குறிப்பாக தமிழ்-தெலுங்கு நிறைய டப்பிங் படங்களை கொடுப்பது வழக்கம். அப்படியாக, மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றியும் அதனை தெலுங்கு பக்கம் இழுத்துச் சென்றது. மேலும் தெலுங்கில் நடிகர் கார்த்திக்குக்கு பெரிய மார்க்கெட் இருப்பதால் மெட்ராஸ் திரைப்படம் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 2014ம் ஆண்டே டப் செய்யப்பட்டு மெட்ராஸ் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பின் பல படங்கள் வந்துபோக தற்போது மெட்ராஸ் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது தெலுங்கு பட உலகம்.


கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு டப்பிங் செய்யப்பட்ட மெட்ராஸ் திரைப்படம் தெலுங்கு திரைக்கு வரவுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருவதாகவும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் படம் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத மெட்ராஸ் திரைப்படம் நிச்சயம் தெலுங்கு ரசிகர்களை கவரும் என படத்தை வெளியிடவுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!

Continues below advertisement
Sponsored Links by Taboola