Watch video | கெத்து லோக்கலாக களமிறங்கும் கார்த்தி! வெளியான சூப்பர் அப்டேட்!

விருமன்  ஷூட்டிங்கின் பொழுது மதுரை ரசிகர்களை சந்திக்கும் கார்த்தி அவர்களிடம் தற்போது தனது படத்தின் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். என்னதான் தனது அப்பா மற்றும் அண்ணன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்க நடிகர்களாக இருந்தாலும், தனது கடின உழைப்பு மற்றும் தனித்துவ நடிப்பால் ரசிகர்களை முதல் படத்திலேயே வெகுவாக கவர்ந்த அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நகரத்து இளைஞராக வலம் வந்தாலும் சரி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துவார்.

Continues below advertisement

தற்போது  மண்வாசனை மணக்க மணக்க படங்களை உருவாக்கும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களை சந்தித்த கார்த்தி படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதன் படி விருமன் படத்தில் தனது கதாபாத்திரம் கெத்து லோக்கலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மதுரை பக்கம் சென்ற கார்த்திக்கு மதுரை மக்கள் உற்சாக  வரவேற்பு அளித்ததாகவும், அவர்கள் பருத்தி வீரன் திரைப்படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார் கார்த்தி.

விருமன்  ஷூட்டிங்கின் பொழுது மதுரை  ரசிகர்களை சந்திக்கும் கார்த்தி அவர்களிடம் தற்போது தனது படத்தின் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு டிபிக்கல் மதுரை இளைஞராக கார்த்தி வரவிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015-ஆம் வெளியான கொம்பன் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் கார்த்தி முத்தையா கூட்டணி  ஹைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. படத்தில் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது  மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.  படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.  இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார் அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் விருமன் படம் மூலம் மீண்டும் கிராமத்து கதையை கையில் எடுத்திருக்கும் முத்தையா அந்த படத்தை வெகுவாக நம்பியுள்ளாராம். விருமன் படத்தில்  கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண்,  பிரகாஷ்ராஜ்,  சூரி, ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola