சினிமாவின் சரவெடியாக இந்த தீபாவளிக்கு வெளியாகும் நடிகர் கார்த்தியின் "சர்தார்" திரைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் கார்த்தியின் பிரமாண்டமான கட் அவுட் ஒன்றை தயார் செய்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.


 



இரும்புத்திரை திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனரான  பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் ஜானரில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் 1 ஆகிய வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இப்படமும் ஒரு அமோகமான வெற்றிப்படமாக நிச்சயம் அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 


 






 


புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸி :


இப்படத்தில் நடிகர் கார்த்தி பல வித்தியாசமான கெட்-அப்களில் முதல் முறையாக நடித்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரியாகவும், உளவாளியாகும் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார். அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் சர்தார் திரைப்படத்துக்கு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். 


கட் அவுட் பணிகளில் கார்த்தியின் ரசிகர்கள்:


படத்தின் விளம்பர பணிகள் ஒரு புறம் இருக்க மறுபக்கம் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் அன்று வைப்பதற்காக நடிகர் கார்த்தியின் பிரமாண்டமான கட் அவுட்களை தயார் செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். அப்படி வெற்றி திரையரங்கில் நடிகர் கார்த்தியின் கட் அவுட் பணிகள் நடைபெறும் புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 


 






 


பிரின்ஸ் படத்தோடு சர்தார் மோதல் :


தீபாவளிக்கு சர்தார் திரைப்படம் வெளியாவது போலவே நடிகர் சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" திரைப்படமும் வெளியாவதால் இரண்டு திரைப்படங்களும் நடுவே கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் இரண்டு படங்களுமே வெவ்வேறு ஜனார் திரைப்படங்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என பேசி வருகிறார்கள் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.