சென்னையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்ற நடிகர் கார்த்தி தனது புதிய கெட்டப்பால் விஜய்யை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.


நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் நடிகர் கார்த்தி பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் படத்தில் பரபரப்பாக இருக்கிறார். இருவரும் நடிக்கும் படங்களும் சென்னையில் ஒரே ஸ்டூடியோவில் அடுத்தடுத்த தளங்களில்தான் படமாகிவருகிறது.
இந்நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பி நடப்பதை அறிந்த கார்த்தி ஒரு விசிட் கொடுக்க நினைத்துள்ளார். உடனே தனக்குக் கிடைத்த ஃப்ரீ டைமில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குச் சென்றுள்ளார். கால் மணி நேரமாக அவர் அங்கேயே உலா வர யாருமே அவரைக் கண்டுபிடிக்கவில்லை. காரணம் சர்தார் படத்திற்காக அவர் போட்டிருக்கும் கெட்டப் அப்படி. சில நிமிடங்களுக்குப் பின்னர் கார்த்தி நேராக தானே விஜய்யிடம் சென்றுள்ளார். அவரிடம் நான் கார்த்தி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். விஜய் ஆச்சர்யப்பட்டுப் போய், அடையாளமே தெரியல கார்த்தி என்று சொல்லியிருக்கிறார்.




படத்திற்காக தான் போட்டிருக்கும் கெட்ட அப் பற்றி மாஸ் ஹீரோ சொன்ன கமென்ட்டில் உருகிப்போனார் கார்த்தி. இருவரும் அரை மணி நேரம் அப்படியே பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஷாட் ரெடியானதும் அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டனர்.


நடிகர் விஜய்யின் 65வது படம் 'பீஸ்ட்' என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய்யின் 47வது பிறந்த நாளன்று வெளியானது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோஸில் நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தில் பிரம்மாண்ட துவக்கக் காட்சி வைத்துள்ளாராம் இயக்குநர் நெல்சன் பிரதீப். விஜய்யின் போக்கிரி படத்தில் இருந்தது போல் அவரின் ’பீஸ்ட்’ படத்தில் அப்படியொரு சண்டைக் காட்சியை அமைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ். மித்ரன் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிகன்னா, மேலும் கர்ணன் படப்புகழ் ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார். கொரோணா இரண்டாம் அலையின் காரணமாக திட்டமிட்டப்படி இப்படத்தின் வேலைகளை தடைபட்டிருந்தது. தர்போது கோகுலம் ஸ்டூடியோஸில் இத்திரைப்பட்டத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், விஜய் கார்த்திர் சந்திப்பு அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.