மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் டீஸர்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியான நாள்முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இப்படத்திலிருந்து "கண்டா வரச்சொல்லுங்க" " மஞ்சணத்தி புராணம் "தட்டான் தட்டான்" போன்ற பாடல்கள் வெளியாகி மில்லியன் வியூஸ்களை தாண்டி கொண்டாடப்பட்டது .


<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a >#karnan</a>🐘 <a >pic.twitter.com/9JtYBBsTeh</a></p>&mdash; Mari Selvaraj (@mari_selvaraj) <a >April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இதை தொடர்ந்து படம் தணிக்கை அறிக்கையில் இருந்து படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது 
திரைப்படம் மார்ச் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளிவர போகிறது .