மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது.




இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. 




படத்தில் தனுஷ் தவிர்த்து  படத்தின் நாயகி மற்றும் தனுஷின் தந்தையாக நடித்த லால் இருவரின் கதாபாத்திரங்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது .  ரஜீஷா விஜயன் மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனார் , தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.




இந்நிலையில் நடிகை ரஜீஷா விஜயன் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‛சர்தார் ’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார் , படத்தின் நாயகிகளாக  ரஜீஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . படத்தை பற்றிய முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .