பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு அதில் நடித்த நடிகர்களில் யாருக்கு மவுசு அதிகரித்ததோ இல்லையோ நடிகர் பிரபாஸ் காட்டில் மழைதான் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான டோலிவுட் வட்டாரங்கள். பாகுபலி படத்திற்கு பிறகு , நடிகர் பிரபாஸுக்கு பாலிவுட் பக்கமும் ஏராளமான ரசிகர்கள். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான சாஹோ படம் எதிர்பார்த்த விமர்சனங்களை பெறாவிட்டாலும், எதிர்பார்க்காத வசூலை பெற்றுத்தந்தது.  தற்போது ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாவுள்ள அவரின் 25 வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  “ஸ்பிரிட் “ என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தை பிரபல இயக்குநர்  இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார் . சந்தீப் ரெட்டி வாங்கா  விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது






இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இந்தியாவில் பிரபலமான நடிகை ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் இயக்குநர். தென்னிந்திய நடிகைகளை தேர்வு செய்தால், பாலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியம் இல்லாமல் போகும் என்பதால், பாலிவுட் பக்கமே நடிகை தேர்வில் இறங்கியுள்ளாராம். தனது கதைக்கு பிரபல இந்தி நடிகை கரினா கபூர்  பொருத்தமாக இருப்பார் என்பதால் , அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. கரினாவும்  க்ரீன் சிக்னல் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இந்த கூட்டணியில் உருவாகும் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தில் டாக்காக மாறியுள்ளது.  கரீனா கபூர் மற்றும் பிரபாஸ் இருவரும் நல்ல நணபர்கள் . முன்னதாக பிரபாஸ் கரீனா கபூரின் இல்லத்திற்கு பிரியாணி தயார் செய்து அனுப்பியிருந்தார். அதனை ”பாகுபலி எனக்கு பிரியாணி அனுப்பியுள்ளார். மிகச்சிறப்பாக இருக்க போகிறது “ என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் கரீனா. 





தற்போது உருவாக உள்ள பிரபாஸ் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியின் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பிரிட் திரைப்படம் பிரபாஸின் 25 வது படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக இயக்க இயக்குநர் முடிவெடுத்துள்ளாராம் இயக்குநர். இது குறித்த அறிவிப்பை நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பிரிட் படத்தை பிரபல t series நிறுவனம் சார்பில் புஷன் குமாரும் , பத்திரகாளி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.